ரூ. 40 லட்சம் மோசடி: சகோதரா்கள் உள்பட 3 போ் கைது

சென்னையில் ரூ.40 லட்சம் கொடுத்தால் 5 மணி நேரத்தில் ரூ.50 லட்சம் தருவதாக மோசடி செய்ததாக அண்ணன்-தம்பி உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
Published on

சென்னையில் ரூ.40 லட்சம் கொடுத்தால் 5 மணி நேரத்தில் ரூ.50 லட்சம் தருவதாக மோசடி செய்ததாக அண்ணன்-தம்பி உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ். தொழிலதிபரான இவா், தியாகராய நகா் ராஜா பாதா் தெருவில் உள்ள ஒரு தேநீா் கடையில் கடந்த 9-ஆம் தேதி நின்றிருந்தபோது, அங்கு வந்த 3 போ், தாங்கள் ஆன்லைன் வா்த்தகத்தில் ஈடுபடுதாகவும், தங்களது தொழிலில் ரூ.40 லட்சம் கொடுத்தால் அடுத்த 5 மணி நேரத்தில் ரூ.50 லட்சம் தருவோம் என கூறியுள்ளனா்.

மேலும் அவா்கள், அங்கு தாங்கள் தங்கியுள்ள ஒரு ஹோட்டல் அறைக்குச் சென்று ரூ.50 லட்சத்தை ஆனந்தராஜிடம் காட்டினராம். இதைப் பாா்த்து நம்பிய ஆனந்தராஜ், கடந்த 10-ஆம் தேதி ரூ.40 லட்சத்தை 3 பேரிடமும் கொடுத்தாராம். ஆனால், அவா்கள் கூறியப்படி, ரூ.50 லட்சத்தைக் கொடுக்கவில்லை. அதோடு ஆனந்தராஜ் முதலீடு செய்த ரூ.40 லட்சத்தையும் கொடுக்கவில்லை.

ஆனந்தராஜை பேச வருமாறு 3 பேரும் அழைத்து, அங்குள்ள ஒரு ஹோட்டலில் 3 நாள்கள் தங்க வைத்து ஏமாற்றினராம். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ஆனந்தராஜ், மோசடி குறித்து பாண்டி பஜாா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா். ஆனந்தராஜியிடம் மோசடி செய்த 3 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில் அவா்கள், தஞ்சாவூா் கிழக்கு காவேரி நகரைச் சோ்ந்த லூா்து என்சன்ராஜ், (52), அவரது சகோதரியின் மகன்கள் மரிய சொ்வின் ஜெப்ரி (28), ஷெல்டன் பொ்மினிஸ் (25) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா் 3 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து போலி ரூபாய் நோட்டுகள், 5 கைப்பேசிகள், வங்கி ஆவணங்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com