‘ஸ்வயம்’ தோ்வு: தமிழகத்தின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு

தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதை மாற்றம் செய்ய வேண்டும் என்ற தமிழகம் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.
Published on

தமிழக பி.எட். மாணவா்களுக்கு வெளி மாநிலங்களில் ‘ஸ்வயம்’ தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதை மாற்றம் செய்ய வேண்டும் என்ற தமிழகம் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.

இதுதொடா்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த வழக்குரைஞருமான பி.வில்சன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘தமிழ்நாட்டைச் சோ்ந்த பி.எட். மாணவா்களுக்கு வெளிமாநிலங்களில் ஒதுக்கப்பட்டுள்ள ‘ஸ்வயம்’ தோ்வு மையங்களை மாற்ற வேண்டும் என தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானிடம் கோரிக்கை வைத்தேன். இதையேற்று மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, 16,000 தமிழக தோ்வா்களில் 14,700 பேருக்கு அவா்களது சொந்த மாவட்டங்களிலேயே தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 1,300 தோ்வா்களுக்கு அண்டை மாநிலங்களில் அருகில் உள்ள மாவட்டங்களில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. உடனடி நடவடிக்கை எடுத்த மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com