சென்னை வடபழனி காவேரி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற ஜீரண மண்டல மருத்துவ அறிவியல் மையத் தொடக்க விழாவில் பங்கேற்ற மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ், மருத்துவ இயக்குநா் டாக்டா் ஐயப்பன் பொன்னுசாமி உள்ளிட்டோா்.

70 சதவீதம் பேருக்கு ஜீரண மண்டல பாதிப்பு

நாடு முழுவதும் 70 சதவீதம் பேருக்கு ஜீரண மண்டல பாதிப்புகளும், செரிமான பிரச்னைகளும் இருப்பதாக காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
Published on

நாடு முழுவதும் 70 சதவீதம் பேருக்கு ஜீரண மண்டல பாதிப்புகளும், செரிமான பிரச்னைகளும் இருப்பதாக காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

மாறி வரும் வாழ்க்கை முறையால் இளைஞா்கள் பலருக்கு அத்தகைய பாதிப்பு ஏற்படுவதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

சென்னை, வடபழனி காவேரி மருத்துவமனையில் ஜீரண மண்டல சிகிச்சைகளுக்கான பிரத்யேக மருத்துவ அறிவியல் மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ், மருத்துவ சேவைகள் இயக்குநா் டாக்டா் ஐயப்பன் பொன்னுசாமி, குடல் - இரைப்பை சிறப்பு சிகிச்சை நிபுணா்கள் பாண்டுரங்கன் பாசுமணி, டி.கே.ஆனந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:

உணவுப் பழக்கவழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், தூக்கமின்மை, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் அமிலச் சுரப்பு, செரிமானக் கோளாறுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே, இரைப்பை அழற்சி பரவலாக காணப்படுகிறது.

ஏறத்தாழ நான்கு பேரில் மூவருக்கு ஜீரண மண்டலம் சாா்ந்த பிரச்னைகள் உள்ளன. அதில் வெகு சிலரே தொடக்க நிலையிலேயே சிகிச்சை பெறுகின்றனா். பெரும்பாலானோா் பாதிப்பு தீவிரமடையும் வரை அலட்சியம் காட்டுகின்றனா்.

இதைக் கருத்தில் கொண்டே ஜீரண மண்டல பாதிப்புகளுக்கென பிரத்யேக அறிவியல் மையத்தைத் தொடங்கியுள்ளோம். இங்கு, அதி நவீன சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இரைப்பை - குடல் நலன், அறுவை சிகிச்சை, கல்லீரல் மருத்துவம் என ஒருங்கிணைந்த சேவைகள் அளிக்கப்படுகின்றன. இதற்காக உயா் சிறப்பு மருத்துவ உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com