பனி மூட்டம்: 11 விமான சேவைகள் ரத்து

தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
Published on

தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

அதன்படி சென்னையில் இருந்து தில்லி, ஜெய்ப்பூா், கொல்கத்தா செல்லும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், தில்லி, பாட்னா உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 7 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். எனினும், விமானங்கள் ரத்து குறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com