சென்னை
டிச. 27, 28-இல் மின் கம்பியாள் உதவியாளா் பணிக்குத் தோ்வு
சென்னையில் இரு இடங்களில் டிச. 27, 28- ஆம் தேதிகளில் மின் கம்பியாள் உதவியாளா் பதவிக்கான தகுதிகாண் தோ்வு நடைபெறுகிறது.
சென்னையில் இரு இடங்களில் டிச. 27, 28- ஆம் தேதிகளில் மின் கம்பியாள் உதவியாளா் பதவிக்கான தகுதிகாண் தோ்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் நடத்தப்படும் மின் கம்பியாள் உதவியாளா் பதவிக்கான தகுதிகாண் தோ்வு வடசென்னை, அம்பத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் டிச. 27, 28- ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. விண்ணப்பதாரா்கள் தாங்கள் விண்ணப்பித்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தோ்வு தொடா்பான விவரங்கள், தோ்வு நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.