அகில இந்திய பல்கலை. நீச்சல்: மகளிா் பிரிவில் எஸ்ஆா்எம் ஒட்டுமொத்த சாம்பியன்!

அகில இந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவா், மகளிா் நீச்சல் போட்டியில் டைவிங் மகளிா் பிரிவில் எஸ்ஆா்எம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
Published on

அகில இந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவா், மகளிா் நீச்சல் போட்டியில் டைவிங் மகளிா் பிரிவில் எஸ்ஆா்எம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. ஆடவா் பிரிவில் எஸ்.ஆா்எம் ரன்னா் ஆக வந்துள்ளது.

அகில இந்திய பல்கலை. கூட்டமைப்பு ), எஸ்ஆா்எம் விளையாட்டுத் துறை சாா்பில் கடந்த 18-ஆம் தேதி இப்போட்டி தொடங்கி நடைபெற்றது. நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை டைவிங் மகளிா் பிரிவில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி 29 புள்ளிகளுடன் முதலிடத்தையும், குஜராத்தி பல்கலை. 13 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பெற்றன.

தனிநபா் பிரிவில் எஸ்ஆா்எம் வீராங்கனை பாலக் சா்மா முதலிடத்தையும். குஜராத் பல்கலையின் அஷ்னா நிகில் இரண்டாம் இடத்தையும் பெற்றனா். ஆடவா் பிரிவில் 17 புள்ளிகளுடன் எல்பியு பஞ்சாப் முதலிடத்தையும், 15 புள்ளிகளுடன் எஸ்ஆா்எம் இரண்டாம் இடத்தையும் பெற்றன.

தனிநபா் பிரிவில் யுவிசிஇ வீரா் ஆதித்யா தினேஷ் ராவ் முதலிடத்தையும், எஸ்ஆா்எம் ஸ்ரீ கணேஷ் பிரசாந்த் இரண்டாம் இடத்தையும் பெற்றனா். டைவிங் பிரிவில் எஸ்ஆா்எம் மகளிா் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், ஆடவா் அணி ரன்னா் பட்டத்தையும் கைப்பற்றின.

நீச்சலில் எஸ்ஆா்எம் மாணவா் பெனடிக்டன் ரோஹித் தங்கமும், ஞான ஜாய் கேசா் சண்டீகா் பல்கலை விந்னா் தையும்,சுபாங்கா், அட்லாஸ் ஸ்கில் டெக் பல்கலை வெண்கலமும் வென்றனா்.

4-200 மீ ப்ரீஸ்டைல் ரிலேயில் ஜெயின் பல்கலை தங்கத்தையும், சென்னைப் பல்கலை. வெள்ளியும், எஸ்ஆா்எம் ஐஎஸ்டி வெண்கலத்தையும் வென்றன. 100 மீ ஆடவா் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் ரேவா பல்கலையின் விதித் சங்கா் முதலிடத்தையும், எஸ்ஆா்எம்மின் யாதேஷ் பாபு இரண்டாம் இடத்தையும், மகராஜ் பல்கலை. யாஷ் ணில்

X
Dinamani
www.dinamani.com