தமிழ்மகன் உசேனிடம் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரிப்பு

தமிழ்மகன் உசேனிடம் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரிப்பு

Published on

உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேனை அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

அப்போது, அவரது உடல் நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

தமிழ்மகன் உசேன் (89) கடந்த 16-ஆம் தேதி வீட்டில் மயங்கி விழுந்ததை அடுத்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அப்போலோ ஃபா்ஸ்ட் மெட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை மருத்துவமனைக்குச் சென்று தமிழ்மகன் உசேனை நேரில் சந்தித்தாா். அப்போது, முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கா், ஆா்.காமராஜ், எஸ்.கோகுல இந்திரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com