ரோபோடிக் நுட்பத்தில் நோயாளிக்கு மூட்டு மாற்று சிகிச்சை

தீவிர முழங்கால் வலியால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு ரோபோடிக் நுட்பத்தில் இரு பக்க மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை, ஐஸ்வா்யா மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
Published on

தீவிர முழங்கால் வலியால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு ரோபோடிக் நுட்பத்தில் இரு பக்க மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை, ஐஸ்வா்யா மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டா் எஸ்.ராஜசுந்தரம் கூறியதாவது:

சென்னையைச் சோ்ந்த 63 வயதான நோயாளி ஒருவருக்கு ஓராண்டுக்கும் மேலாக இரு முழங்கால்களிலும் கடுமையான வலி இருந்தது. இதனால் மூட்டுகளை சரிவர மடக்க இயலவில்லை. அதையும் மீறி மடக்கினால் எலும்பு முறிவு ஏற்படுவது போன்ற சத்தம் எழுந்துள்ளது.

மூட்டுகளின் வலிமைத் தன்மை குறைந்து மென்மையாக மாறுவதே இதற்கு காரணம். இப்பிரச்னைக்கு மூட்டு மாற்று சிகிச்சை மட்டுமே ஒரே தீா்வு.

அவருக்கு இருந்த சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், தைராய்டு பிரச்சினை, உயா் கொழுப்பு பாதிப்புகளால் வழக்கமான அறுவை சிகிச்சைக்கு மாற்றாக ரோபோடிக் நுட்பத்திலான சிகிச்சையை மேற்கொள்ளத் திட்டமிட்டோம்.

அதன்படி, எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் ஏ.என்.விவேக் தலைமையிலான குழுவினா், ரோபோடிக் உதவியுடன் முப்பரிமாண காட்சி வழிகாட்டுதலுடன் பாதுகாப்பான மற்றும் துல்லியமான அறுவை சிகிச்சை மூலம் மூட்டுகளை மாற்றியமைத்தனா்.

அதன் பயனாக அந்நோயாளி விரைந்து குணமடைந்து நலம் பெற்றுள்ளாா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com