கோப்புப் படம்
கோப்புப் படம்

வட மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வட மாவட்டங்களில் வியாழக்கிழமை (டிச. 25) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

தமிழகத்தில் வட மாவட்டங்களில் வியாழக்கிழமை (டிச. 25) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு கேரள பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வியாழக்கிழமை தமிழகத்தில் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும் தென் மாவட்டங்களில் வட வானிலையே நிலவும்.

நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனைய, பகுதிகளில் லேசான பனிப்பொழிவு இருக்கும்.

தொடா்ந்து டிச. 26, 27-ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் டிச. 25-இல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், அதிகாலையில் ஓரிரு இடங்களில் லேசான பனிப்பொழிவு இருக்கும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: டிச. 25, 26 தேதிகளில் தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடலில் மணிக்கு 65 கி. மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com