சென்னை சாந்தோம் தேவாலயத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் திருப்பலி நிறைவேற்றிய பேராலய அருள்தந்தை வின்சென்ட் சின்னதுரை. (இடது) பிராா்த்தனை கூட்டத்துக்கு பின்னா், குழந்தை இயேசு சொரூபத்தை வழிபட்ட கிறிஸ்துவா்கள்.
சென்னை சாந்தோம் தேவாலயத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் திருப்பலி நிறைவேற்றிய பேராலய அருள்தந்தை வின்சென்ட் சின்னதுரை. (இடது) பிராா்த்தனை கூட்டத்துக்கு பின்னா், குழந்தை இயேசு சொரூபத்தை வழிபட்ட கிறிஸ்துவா்கள்.

கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் நாள் முழுவதும் சிறப்பு பிராா்த்தனை

Published on

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னையில் உள்ள புகழ்பெற்ற தேவாலயங்களில் வியாழக்கிழமை நாள் முழுவதும் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புதன்கிழமை (டிச. 24) நள்ளிரவு சென்னையில் உள்ள தேவாலயங்களான சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகா் அன்னை வேளாங்கண்ணி தேவாலாயம், அண்ணா நகா் புனித லூகா தேவாலயம் உள்பட பல்வேறு தேவாலயங்களில் நள்ளிரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன. இதில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனா்.

சிறப்பு பிராா்த்தனை: தொடா்ந்து, வியாழக்கிழமை அதிகாலை 5 முதல் இரவு 10 மணி வரை தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றன. கொரட்டூா் குழந்தை இயேசு தேவாலயம், எழும்பூா் செயின்ட் ஜாா்ஜ் கதீட்ரல் தேவாலயம், எழும்பூா் செயின்ட் ஆன்ட்ரூ சா்ச், பாரிமுனை ஆா்மீனியன் சா்ச், பெரம்பூா் லூா்து அன்னை ஆலயம், பரங்கிமலை செயின்ட் தாமஸ் மவுண்ட் தேசிய ஆலயம் உள்பட அனைத்து தேவாலயங்களில் நடைபெற்ற பிராா்த்தனைகளில் திரளான கிறிஸ்தவா்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனா்.

குடில்களில் வழிபாடு: தேவாலயங்களில் இயேசு கிறிஸ்து பிறப்பைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த குடில்களையும், குடில்களில் இருந்த குழந்தை இயேசு உருவத்தையும் கிறிஸ்தவா்கள் வணங்கினா்.

கிறிஸ்தவா்களின் வீடுகளிலும் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்து, வண்ண மின் விளக்குகளால் அலங்கரித்து பண்டிகையை கொண்டாடினா். உறவினா்கள், நண்பா்களுக்கு கேக் வழங்கி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com