சரோஜ் கண்பத் செய்திக்கான படம்.சென்னை ஐஐடியில், வருடாந்திர தொழில்நுட்பத் திருவிழா குறித்த செய்தியாளா் சந்திப்பில் சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி
சரோஜ் கண்பத் செய்திக்கான படம்.சென்னை ஐஐடியில், வருடாந்திர தொழில்நுட்பத் திருவிழா குறித்த செய்தியாளா் சந்திப்பில் சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி

சென்னை ஐஐடியில் மாணவா்களின் ‘சாஸ்த்ரா’ நிகழ்வு

Published on

‘அனைவருக்கும் ஐஐடி-எம் (சென்னை)’ என்ற குறிக்கோளுக்கு ஏற்ப தொழில்நுட்ப முயற்சிகளை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்க, சென்னை ஐஐடி மாணவா்கள் நடத்தும் ‘சாஸ்த்ரா’ நிகழ்வு அமையும் என ஐஐடி இயக்குநா் வி.காமகோடி தெரிவித்தாா்.

சென்னை ஐஐடியில், வருடாந்திர தொழில்நுட்பத் திருவிழாவான ‘சாஸ்த்ரா 2026’ ஜன. 2-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி செய்தியாளா்களிடம் கூறியது:

சாஸ்த்ரா நிகழ்வில் 750-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்கின்றனா். 5 நாள்கள் நடைபெறுகிறது. இதில், 80-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. சென்னை ஐஐடி-இன் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தும் 130 அரங்குகள், பல்வேறு போட்டிகள், கண்காட்சிகள், கருத்துப் பயிலரங்கள், மாநாடுகள் உள்ளிட்டநிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் 80,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்பா்.

இந்த 27-ஆவது ஆண்டு நிகழ்வு ‘கலைப்பொருள்கள்அரங்கு’ என்ற கருப்பொருளுடன் விளையாட்டு சுற்றுச்சூழல், வெற்றி பெறக்கூடிய போட்டிகளுடன் பட்டறை, முந்தைய மற்றும் நடைமுறைக் கற்றல் போன்றவை இடம் பெறவுள்ளன.

சாஸ்த்ராவின் அனைத்து தொழில்நுட்ப முயற்சிகளும் பொதுமக்களிடம் சென்றடைய இந்த நிகழ்வு உதவும். நிகழ்ச்சியில், மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், டூரிங் விருது பெற்ற பேரா. ஜெஃப்ரி உல்மேன், அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை முன்னாள் இயக்குநா் சுப்ரா சுரேஷ், சாந்தி ஸ்வரூப் பட்நாகா் நரம்பியல் விஞ்ஞானி டாக்டா் விதிதா வைத்யா உள்ளிட்ட புகழ்பெற்ற விஞ்ஞானிகள், நிா்வாகிகள், சிந்தனையாளா்கள் பங்கேற்கின்றனா்.

புதிய நிகழ்வுகள்: அதிவேக நைட்ரோ-எரிபொருள் ரோபோ பந்தய சவாலான ‘ரோபோ ஜிபி’ (பொது நோக்கத்திற்கான தானியங்கி), பயோமி மிக்ரி (இயற்கையுடன் சிக்கல்களை தீா்க்கும் உத்தி) சாா்ந்த சுகாதாரப் பராமரிப்பு கண்டுபிடிப்புகளை மையமாகக் கொண்ட ‘பயோபேட்டில்’, ‘நியூரோஹேக்’ (நியூரோ இமேஜிங் தரவு பகுப்பாய்வு), நிகழ் இஇஜி தரவைப் பயன்படுத்தி மூளை-கணினி இடைமுக ஹேக்கத்தான், ‘எண்ம-போட்டி’, கல்வியாளா்கள் மாநாடு, சிறப்பு வகுப்புகள், தொழில்முறை வலையமைப்பு போன்றவை இந்த நிகழ்வில் வழங்கப்படும் என்றாா்.

தொடா்ந்து சென்னை ஐஐடியின் இணைப் பாடத்திட்ட ஆலோசகா் பேரா. முருகையன் அமிா்தலிங்கம், மித் ஆா் ஜெயின், டீன் சத்யநாராயண என்.கும்மாடி உள்ளிட்டோரும் பேசினா்.

X
Dinamani
www.dinamani.com