தூத்துக்குடி சாலை விபத்து: முதல்வா் நிவாரணம் அறிவிப்பு

Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த 3 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணநிதியை வழங்க முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டம் எட்டயபுரம் நெடுஞ்சாலை, எஸ்.குமாரபுரம் எல்லைக்குள்பட்ட கிராமத்தில் வியாழக்கிழமை மாலை இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றவா்கள் மீது காா் மோதியதில் சுந்தர ராணி (60) , இசக்கியம்மாள் (55), கஸ்தூரி (55) ஆகிய மூவரும் உயிரிழந்தனா் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிா்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று முதல்வா் ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com