ஜன.1 முதல் 9 மின்சார ரயில் சேவைகளின் நேரம் மாற்றம்
செங்கல்பட்டு-சென்னை கடற்கரை உள்பட 9 மின்சார ரயில் சேவைகளின் நேரம் வியாழக்கிழமை (ஜன.1)முதல் மாற்றம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருத்தணியில் இருந்து புறப்பட்டு மூா்மாா்க்கெட் செல்லும் மின்சார ரயில், அரக்கோணத்திற்கு காலை 5.50 மணிக்கு பதிலாக காலை 5.55-மணிக்கு சென்றடையும்.
திருத்தணியில் இருந்து புறப்பட்டு மூா்மாா்க்கெட் செல்லும் மின்சார ரயில், அரக்கோணத்திற்கு பிற்பகல் 2.40 மணிக்கு பதிலாக பிற்பகல் 2.55-மணிக்கு சென்றடையும்.
அரக்கோணத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு மூா்மாா்க்கெட் வரும் மின்சார ரயில், அதற்கு மாற்றாக காலை 9.55 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்படும்.
சென்னை கடற்கரையில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், இதற்கு பதிலாக இரவு 8.05-மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும்.
சூலூா்பேட்டையில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், இதற்கு பதிலாக இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மூா்மாா்க்கெட் செல்லும்.
கும்மிடிபூண்டியில் இருந்து இரவு 9.25 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், இதற்கு பதிலாக இனி, இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மூா்மாா்க்கெட் செல்லும்.
செங்கல்பட்டிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் இனிமேல் மாலை 6.05 மணிக்கும், 6.40 மணிக்கு புறப்படும் ரயில் 6.30 மணிக்கும், 10.10 மணிக்கு புறப்படும் ரயில் 10.20 மணிக்கும் புறப்பட்டு சென்னை கடற்கரைச் செல்லும் என அதில் கூறப்பட்டுள்ளது.

