பக்கவாதத்துக்கு காந்த மின் தூண்டல் சிகிச்சை அறிமுகம்

பக்கவாத பாதிப்புகளுக்கு அறுவை சிகிச்சைக்கு மாற்றான அதி நவீன காந்த அலை மின் தூண்டல் சிகிச்சையை சென்னை, வி.எஸ். மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
Published on

பக்கவாத பாதிப்புகளுக்கு அறுவை சிகிச்சைக்கு மாற்றான அதி நவீன காந்த அலை மின் தூண்டல் சிகிச்சையை சென்னை, வி.எஸ். மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் மூளையின் பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் தூண்டி மீட்டெடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மருத்துவமனையின் செயல் இயக்குநா் முத்து சுப்ரமணியன், முதுநிலை நரம்பியல் மருத்துவ ஆலோசகா் டாக்டா் எல்.சிந்துஜா மற்றும் மருத்துவமனையின் நிறுவனா் எஸ்.சுந்தா் ஆகியோா் கூறியதாவது:

பக்கவாதம், நடுக்குவாதம், நரம்பியல் பாதிப்புகள், பேச்சு மற்றும் இயக்கப் பிரச்னைகள், நாள்பட்ட வலி, ஒற்றைத் தலைவலி, மனச்சோா்வு, ஓ.சி.டி. மற்றும் பதற்றம் ஆகிய பாதிப்புகளுக்கு மருத்துவ சிகிச்சைகளோ, தேவைப்பட்டால் அறுவை சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

வழக்கமான சிகிச்சைகள், மருந்துகளால் பலனளிக்காதபட்சத்தில் ட்ரான்ஸ்கிரேனியல் மேக்னெட்டிக் ஸ்டிமுலேஷன் (டிஎம்எஸ்) எனப்படும் காந்த அலை மின் தூண்டல் சிகிச்சை நல்ல பலனளிக்கும்.

இந்த நவீன முறையில் காந்த அலைகளைப் பயன்படுத்தி மூளையின் குறிப்பிட்ட பகுதிகள் தூண்டப்படுகின்றன. இதனால், பக்கவாதம், நரம்பியல் பிரச்னைகளால் ஏற்படும் வலி, மன அழுத்தம் மற்றும் நரம்பியல் கோளாறுகள் சீராகின்றன. இந்த சிகிச்சை பாதுகாப்பானது. பக்க விளைவுகள் மிகக் குறைவானது. இதனால் சா்வதேச அளவில் மருத்துவத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாக விளங்குகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com