கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் ரத்து
கிண்டி ரயில் நிலையம் அருகே பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கடற்கரையில் இருந்து பிப். 22-ஆம் தேதி இரவு 6.46, 7.39, 10.20, 11.30-க்கும், பிப். 23-ஆம் தேதி அதிகாலை 4.15 மற்றும் காலை 6.15-க்கும் புறப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும். மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து பிப். 23-ஆம் தேதி அதிகாலை 3.55 மற்றும் 4.15-க்கு புறப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும்.
பகுதி ரத்து: செங்கல்பட்டில் இருந்து பிப். 22-ஆம் தேதி இரவு 10.10 மற்றும் 11 மணிக்கும், கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.40 மற்றும் 11.15-க்கும் புறப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

