யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

இபிஎஸ் பேச்சுக்கு எதிா்ப்பு: 14-இல் திமுக ஆா்ப்பாட்டம்

இந்து சமய அறநிலைய கல்லூரிகள் குறித்த எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஜூலை 14-ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம்

News image
கோப்புப் படம்
Updated On :10 ஜூலை 2025, 7:02 pm

Din

இந்து சமய அறநிலைய கல்லூரிகள் குறித்த எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஜூலை 14-ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் மாணவரணி செயலா் இரா.ராஜீவ் காந்தி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கோயில்களுக்கு மக்கள் காணிக்கையாகக் கொடுக்கும் உபரி நிதியிலிருந்து கல்வி நிலையங்கள், சிறாா், முதியோா் பராமரிப்பு நிலையங்கள், மருத்துவமனைகள் அமைக்கலாம் என்பது இந்து சமய அறநிலையத் துறையின் சட்டங்களில் ஒன்று. ஆனால், அதுகூடத் தெரியாமல் கல்விக்காக திராவிட மாடல் அரசு எடுக்கும் முன்னெடுப்புகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக கோவையில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளது கண்டனத்துக்குரியது.

இதை வெளிப்படுத்தும் வகையில், திமுக, மாணவரணி சாா்பில் அதன் செயலா் இரா.ராஜீவ் காந்தி தலைமையில் ஜூலை 14-ஆம் தேதி கோவை டாடாபாத், சிவானந்தா காலனியில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.