மக்களுக்கு எச்சரிக்கை! சென்னையில் 3 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து!

சென்னையில் 3 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...
சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி
Published on
Updated on
1 min read

சென்னை மாநகராட்சியில் உள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படவுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2வது வரிசை பிரதான குடிநீர் குழாயினை, ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் குடிநீர் பிரதான குழாயுடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஜூலை 30 அன்று காலை 8 மணி முதல் ஆக. 1 ஆம் தேதி இரவு 10.00 மணி வரை மண்டலங்கள் -7, 8, 9, 10, 11, 12, 13 மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2000 மி.மீ விட்டமுடைய 2வது வரிசை பிரதான குடிநீர் குழாயினை, ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் 2000 மி.மீ குடிநீர் பிரதான குழாயுடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஜூலை 30 அன்று காலை 8 மணி முதல் ஆக. 1 ஆம் தேதி இரவு 10.00 மணி வரை மண்டலங்கள் -7 (அம்பத்தூர்), 8 – (அண்ணா நகர்), 9 – (தேனாம்பேட்டை), 10 – (கோடம்பாக்கம்), 11 - (வளசரவாக்கம்), 12 - (ஆலந்தூர்), 13 – (அடையாறு) மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The Chennai Drinking Water Board has announced that drinking water supply will be suspended in 7 zones of the Chennai Corporation from July 30 to August 1.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com