நாட்டிலேயே முதல்முறை! சென்னையில் வணிக வளாகம் உள்ளே செல்லும் மெட்ரோ ரயில்!

சென்னையில் வணிக வளாகம் உள்ளே இயக்கப்படும் மெட்ரோ ரயில்.
மங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்துடன் கூடிய 9 மாடி கட்டடத்தின் மாதிரிப்படம்.
மங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்துடன் கூடிய 9 மாடி கட்டடத்தின் மாதிரிப்படம்.
Published on
Updated on
1 min read

நாட்டிலேயே முதல்முறையாக சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 9 மாடி வணிக வளாக கட்டடம் அமைக்கப்படவுள்ள நிலையில், அதன் வழியாக மெட்ரோ ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள இந்த மெட்ரோ ரயிலில், பயணம் செய்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மெட்ரோ ரயில் விமான நிலையம் - விம்கோ நகா், சென்ட்ரல் - பரங்கிமலை இடையே 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

மேலும், 3 வழித்தடங்களில் 118 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கி, ஜூன் 29-ஆம் தேதியுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இந்த நிலையில், சென்னை திருமங்கலத்தில் மெட்ரோ நிலையத்துடன் கூடிய வணிக வளாகம் அமைக்கப்படவுள்ளது. வணிக வளாகம் உள்ளே சென்று வெளியே வரும் வகையில் மெட்ரோ ரயிலை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

9 மாடிகளை கொண்ட 3 கட்டடங்கள் கட்டப்படுகிறது. கட்டடங்களின் 4வது தளத்தில் மெட்ரோ ரயில் நிலையம், 5 மற்றும் 6வது தளத்தில் மெட்ரோ ரயில்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் சுமார் 6.85 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டு, விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படவுள்ளது.

இங்கு பல்வேறு அலுவலகங்கள், கடைகள் மற்றும் 3 நிலைகளில் சுரங்க வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இது போன்ற அமைப்பு நாட்டிலேயே முதல் முறையாக சென்னை திருமங்கலத்தில் அமையவுள்ளது. திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்துடன் கூடிய 9 மாடி கட்டடத்தின் மாதிரிப்படம் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: உயர்நீதிமன்றம், இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com