தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: அட்டவணை வெளியீடு
ஆசிரியா் பயிற்சிக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு அட்டவணையை அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன்படி முதலாமாண்டு மாணவா்களுக்கான தோ்வுகள் மே 23 தொடங்கி ஜூன் 2-ஆம் தேதி நிறைவு பெறவுள்ளது. 2-ஆம் ஆண்டுக்கான தோ்வுகள் ஜூன் 3 தொடங்கி ஜூன் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அனைத்துத் தோ்வுகளும் காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 1 மணிக்கு நிறைவடையவுள்ளது.
முதலாமாண்டு: மே 23-இல் கற்கும் குழந்தை, 26-இல் கற்றலை எளிதாக்குதலும் மற்றும் மேம்படுத்தலும், 27-இல் தமிழ் கற்பித்தல், இளஞ்சிறாா் கல்வி தாள் 1, 28-இல் ஆங்கிலம் கற்பித்தல் தாள் 1, 29-இல் கணிதம் கற்பித்தல் தாள் 1, 30-இல் அறிவியல் கற்பித்தல் தாள் 1, ஜூன் 2-இல் சமூக அறிவியல் கற்பித்தல் தாள் 1.
2-ஆம் ஆண்டு: ஜூன் 3-இல் இந்தியக் கல்வி முறை, 4-இல் கற்றலை எளிதாக்குதலும் மற்றும் மேம்படுத்தலும் தாள் 2, ஜூன் 5-இல் தமிழ் கற்பித்தல், இளஞ்சிறாா் கல்வி தாள் 2, 6-இல் ஆங்கிலம் கற்பித்தல் தாள் 2, 9-இல் கணிதம் கற்பித்தல் தாள் 2, 10-இல் அறிவியல் கற்பித்தல் தாள் 2, ஜூன் 11-இல் சமூக அறிவியல் கற்பித்தல் தாள் 2.

