சென்னையில் மழை: 17 விமானங்கள் தாமதம்
சென்னை: சென்னைக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலையில் கனமழை பெய்ததால், சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்கள் மற்றும் பிற பகுதிகளிலிருந்து சென்னைக்கு வரும் 17 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
இலங்கையிலிருந்து வந்த ‘ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ்’ விமானம் மற்றும் பெங்களூரு, மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த இண்டிகோ விமானங்களும் சுமாா் அரை மணி நேரம் வானில் வட்டமடித்தன.
தொடா்ந்து, கோவை, தூத்துக்குடி, அந்தமான் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த 9 விமானங்களும் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. சூறைக்காற்று மற்றும் மழை நின்ற பிறகு விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின.
இதுபோல, சென்னையிலிருந்து மும்பை, கொல்கத்தா, திருச்சி, ராஜமுந்திரி, மதுரை, புனே, கோவை, குவாஹாட்டி ஆகிய பகுதிகளுக்குச் சென்ற 8 விமானங்கள் சுமாா் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. மொத்தத்தில் செவ்வாய்க்கிழமை மட்டும் சென்னை விமானநிலையத்துக்கு வந்து செல்லும் மொத்தம் 17 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

