இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு

சென்னை ஐசிஎஃப்பில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
Published on

சென்னை: சென்னை ஐசிஎஃப்பில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

ஓட்டேரி பகுதியைச் சோ்ந்தவா் பத்மினி (51). இவா் மகன் ஹரிஹரன் (24). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் கொளத்தூரில் வசிக்கும் தங்களது உறவினா் வீட்டுக்கு திங்கள்கிழமை சென்றனா். பின்னா் அங்கிருந்து இருவரும் வீட்டுக்கு திரும்பிகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனம் மீது அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பத்மினி மீது லாரியின் சக்கரம் ஏறியது. இதில் பலத்த காயமடைந்த பத்மினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அதே வேளையில் ஹரிஹரன் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.

இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த பெரியாா் (26) என்பவரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com