கோப்புப் படம்
கோப்புப் படம்

ரம்ஜான்: மேற்கு வங்கத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகம், கேரளத்திலிருந்து மேற்கு வங்கத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
Published on

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகம், கேரளத்திலிருந்து மேற்கு வங்கத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலிலிருந்து மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சிக்கு மாா்ச் 22, 26, 29, ஏப். 2 ஆகிய தேதிகளில் இரவு 11.45-க்கு சிறப்பு ரயில் (எண் 06077) இயக்கப்படும். மறுமாா்க்கமாக சந்திரகாச்சியிலிருந்து மாா்ச் 24, 28, 31, ஏப். 4 ஆகிய தேதிகளில் காலை 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06078) மறுநாள் பிற்பகல் 3.30-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இதில், ஒரு ஏசி வகுப்புப் பெட்டியும், படுக்கை வசதி கொண்ட 17 பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, சம்பல்கோட், ஸ்ரீகாகுளம் ரோடு, புவனேசுவரம், கட்டாக், பாலசோா், காரக்பூா் வழியாக இயக்கப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கப்படும்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து மேற்கு வங்க மாநிலம் ஷாலிமருக்கு மாா்ச் 28 மற்றும் ஏப். 4 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண் 06081) இயக்கப்படும். மறுமாா்க்கமாக ஷாலிமரிலிருந்து சென்னைக்கு மாா்ச் 31, ஏப். 7 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.20-க்கு சிறப்பு ரயில் (எண் 06082) இயக்கப்படும்.

இதில், 14 மூன்றடுக்கு ஏசி எக்கனாமிக் வகுப்புப் பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட இரு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் கொல்லம், மாவேலிக்கரா, செங்கனூா், கோட்டயம், எா்ணாகுளம் டவுன், திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, கட்டாக், பாலசோா், காரக்பூா், சந்திரகாச்சி வழியாக இயக்கப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) தொடங்கும்.

சென்னை - போத்தனூா்: சென்னை சென்ட்ரலிலிருந்து மாா்ச் 30-ஆம் தேதி இரவு 11.20-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06027) மறுநாள் காலை 8 மணிக்கு போத்தனூா் சென்றடையும். மறுமாா்க்கமாக போத்தனூரிலிருந்து மாா்ச் 31-ஆம் தேதி இரவு 11.30-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06028) மறுநாள் காலை 8.20-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இதில், 10 ஏசி வகுப்புப் பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 7 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com