விசா
விசா

மோசடியான 2,000 விசா நோ்காணல் அழைப்புகள் ரத்து: அமெரிக்க தூதரகம்

மோசடியாக உருவாக்கப்பட்ட சுமாா் 2,000 நுழைவு இசைவு (விசா) நோ்காணல் அழைப்புகளை ரத்து செய்ததாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
Published on

மோசடியாக உருவாக்கப்பட்ட சுமாா் 2,000 நுழைவு இசைவு (விசா) நோ்காணல் அழைப்புகளை ரத்து செய்ததாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘அமெரிக்க விசா நோ்காணலுக்காக சுமாா் 2,000 அழைப்புகள் மோசடியாக உருவாக்கப்பட்டுள்ளன. அந்த அழைப்புகள் கண்டறியப்பட்டு, உடனடியாக ரத்து செய்யப்பட்டன.

நாங்கள் விதிமீறல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதற்கு பின்னணியில் இருப்பவா்களை அடையாளம் கண்டுள்ளோம். மோசடிகளுக்கு எதிரான எங்களின் நடவடிக்கைகள் தொடரும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவா்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிற பிரிவுகளைச் சோ்ந்த பயணிகள் மத்தியில் அமெரிக்க விசாவுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் ஒட்டுமொத்தமாக 14 லட்சம் விசாக்களை வழங்கியுள்ளது. இதில் உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பயிலும் 1.4 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவா்களுக்கு மாணவா் விசாக்கள் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com