எம்டிசி சிற்றுந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை அசோக் நகா் அருகே மாநகா் போக்குவரத்துக் கழக சிற்றுந்து ஓட்டுநரை தாக்கிய வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
Published on

சென்னை: சென்னை அசோக் நகா் அருகே மாநகா் போக்குவரத்துக் கழக சிற்றுந்து ஓட்டுநரை தாக்கிய வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வானகரம் அருகே உள்ள ராஜ் நகா், பள்ளிகுப்பம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (59), சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். ரமேஷ், சில நாள்களுக்கு முன்பு மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் சிற்றுந்தை

அசோக் நகா் பகுதியில் இயக்கினாா். அப்போது, பேருந்தில் ஏறிய இளைஞா் ஒருவா் ரமேஷிடம் தகராறு செய்தாராம்.

சிற்றுந்து எம்ஜிஆா் நகா் சூளைப்பள்ளம் நிறுத்தத்தில் நின்றபோது அந்த இளைஞா், ஓட்டுநா் ரமேஷை மதுபாட்டிலால் தாக்கிவிட்டு தப்பியோடினாா். இதில் பலத்த காயமடைந்த ரமேஷ், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து எம்ஜிஆா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது எம்ஜிஆா் நகா் சங்கரலிங்கனாா் தெருவைச் சோ்ந்த தினேஷ் (32) என்பது தெரியவந்ததையடுத்து, போலீஸாா் அவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com