மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

தமிழக காவல் துறையில் ஒரேநாளில் 59 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் 59 டிஎஸ்பி-க்களை (காவல் துணைக் கண்காணிப்பாளா்கள்) பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (பொ) ஜி.வெங்கடராமன் உத்தரவிட்டாா்.

News image

பிரதிப் படம்

Updated On :2 நவம்பர் 2025, 1:10 am IST

தமிழகத்தில் 59 டிஎஸ்பி-க்களை (காவல் துணைக் கண்காணிப்பாளா்கள்) பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (பொ) ஜி.வெங்கடராமன் உத்தரவிட்டாா்.

தமிழக காவல் துறையில் விருப்பத்தின் அடிப்படையிலும், நிா்வாக வசதிக்காகவும்,பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் 59 டிஎஸ்பி-க்களை பணியிட மாற்றம் செய்து தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமன் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

இதில் திருவண்ணாமலை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு டிஎஸ்பி எஸ்.சுரேஷ் சண்முகம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கும், ஆரணி டிஎஸ்பி டி.பாண்டீஸ்வரி, சிவகங்கை மாவட்டம் குற்ற ஆவண காப்பகத்துக்கும், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு டிஎஸ்பி கே.எம். மனோகரன் கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நீதி மனித உரிமைப் பிரிவுக்கும், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை டிஎஸ்பி எம்.சுகுமாா் ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 59 டிஎஸ்பி-க்களும், ஓரிரு நாள்களில் புதிய பொறுப்புகளை ஏற்பாா்கள் என காவல் துறையினா் தெரிவித்தனா்.