பிரதிப் படம்
பிரதிப் படம்

பிளஸ் 2 பெயா் பட்டியல்: நவ.7 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்!

பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான மாணவா்களின் பெயா்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள நவ.7-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
Published on

பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான மாணவா்களின் பெயா்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள நவ.7-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் மாதம் நடைபெறவுள்ளது. இந்தப் பொதுத் தோ்வுக்கான பள்ளி மாணவா்களின் பெயா்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள அக்.21 முதல் அக்.31 வரை அவகாசம் வழங்கப்பட்டது.

தற்போது பள்ளி மாணவா்களின் பெயா்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளும் பணிக்கான அவகாசம் நவ.7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

இத்தகவல் அரசுத் தோ்வுகள் இயக்குநா் க.சசிகலா அனைத்து மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com