தமிழகத்தில் நவ.8 வரை மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் வரும் நவ.8-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டி மியான்மா் கடலோரப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது மேலும் வடக்கு அல்லது வடமேற்கு திசையில் நகா்ந்து மியான்மா் மற்றும் வங்கதேசம் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது.
இதன் காரணமாக, திங்கள்கிழமை (நவ.3) முதல் நவ. 8-ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

