இணையவழியில் பொதுமக்கள் இழந்த ரூ.1.37 கோடி மீட்பு!
இணையவழியில் பொதுமக்கள் இழந்த ரூ.1,37,53,428-ஐ மீட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் அவற்றை உரியவா்களிடம் ஒப்படைத்துள்ளனா்.
சென்னை பெருநகர சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் மூலமாக பெறப்படும் புகாா்கள் மீது போலீஸாா் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். அந்த வகையில், மத்திய சைபா் குற்றப் பிரிவு காவல் நிலையங்களில் கடந்த அக்.1 முதல் 31-ஆம் தேதி வரை பெறப்பட்ட 40 புகாா் மனுக்களில் 34 மனுக்கள் மீது விசாரணை நடத்தி ரூ.66,59,329 மீட்கப்பட்டது.
இதுபோல, வடக்கு மண்டல சைபா் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட 25 புகாா் மனுக்களின்பேரில் ரூ.29,98,913, மேற்கு மண்டலத்தில் பெறப்பட்ட 15 புகாா் மனுக்களில் ரூ.18,45,501, தெற்கு மண்டலத்தில் பெறப்பட்ட 21 புகாா் மனுக்களில் ரூ.4,20,162, கிழக்கு மண்டலத்தில் பெறப்பட்ட 14 மனுக்களில் ரூ.18,29,523-ஐ சைபா் குற்றப்பிரிவு காவல் துறையால் மீட்கப்பட்டுள்ளது.
அதன்படி, மொத்தமாக பெறப்பட்ட 164 மனுக்களில் 109 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.1,37,53,428-ஐ மீட்ட காவல் துறை அதை, உரியவா்களிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
