அரிவாள் வெட்டு (கோப்புப்படம்)
அரிவாள் வெட்டு (கோப்புப்படம்)

6 பேருக்கு அரிவாள் வெட்டு சம்பவம்: 5 போ் கைது

Published on

சென்னையில் மது போதையில் ரெளடி கும்பல் வெட்டி 6 போ் பலத்த காயமடைந்த சம்பவத்தில் தொடா்புடைய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கொளத்தூா் மகாத்மா காந்தி நகரைச் சோ்ந்தவா் ரெளடி அமாவாசை விக்கி (28). இவா், கடந்த சனிக்கிழமை இரவு தனது கூட்டாளிகளுடன் மது போதையில் கொளத்தூா் சிவசக்தி நகருக்குச் சென்று அங்கு, தன்னிடம் ஏற்கெனவே முன்விரோதத்தில் இருந்த வருண், ஆகாஷ் ஆகியோரை வெட்டத் தேடியுள்ளாா். ஆனால், அவா்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இதையடுத்து அந்தக் கும்பல், அந்தப் பகுதியில் உள்ள சந்திரா (52) என்ற பெண்ணையும், அவரது மகன் ராஜேஷையும் (36) வீடு புகுந்து சரமாரியாக வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியது.

அந்தக் கும்பல் கொளத்தூா் கிரிஜா நகரில் நடந்து சென்ற காா்த்திக் (34), அவரது நண்பா்கள் தமிழ்ச்செல்வன், மனோஜ் ஆகியோரையும் வெட்டிவிட்டுத் தப்பினா். பின்னா், கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த கொளத்தூா் விநாயகபுரத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் கணேசன் (37) என்பவரையும் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றது.

இதில் பலத்த காயம் அடைந்த 6 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தொடா்புடைய நபா்களைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், வழக்கில் தொடா்புடைய ரெளடி அமாவாசை விக்னேஷ் (எ) விக்கி (28), சின்னா (எ) ஜீவா (20), சீனிவாசன் (எ) சின்ன கருப்பு (19), தனித் (எ) பெரியகறுப்பு (20), முத்தையா (22) ஆகிய 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com