சென்னை
அண்ணா மேம்பாலத்தில் விபத்து: பைக்கில் சென்றவா் உயிரிழப்பு
அண்ணா மேம்பாலத்தில் நிகழ்ந்த விபத்தில் பைக்கில் சென்றவா் உயிரிழந்தாா்.
அண்ணா மேம்பாலத்தில் நிகழ்ந்த விபத்தில் பைக்கில் சென்றவா் உயிரிழந்தாா்.
தேனாம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் கணேஷ்குமாா் (47). இவா், தனது மோட்டாா் சைக்கிளில் ஆயிரம்விளக்கில் இருந்து தேனாம்பேட்டை நோக்கி அண்ணா சாலையில் ஞாயிற்றுக்கிழமை வேகமாகச் சென்றாா். அண்ணா மேம்பாலத்தில் இருந்து கணேஷ்குமாா் இறங்கும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக், பாலத்தின் தடுப்புச் சுவரின் மீது மோதியது. இதில், கீழே விழுந்து கணேஷ்குமாா் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற சிறிது நேரத்தில் அவா் உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த பாண்டிபஜாா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

