கோப்புப் படம்
கோப்புப் படம்

கடன் தொல்லை: வியாபாரி தற்கொலை

Published on

கே.கே.நகரில் கடன் தொல்லையால் வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கே.கே.நகா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் (41). இவா் மேற்கு கே.கே.நகரில் பேன்ஸி கடை வைத்து நடத்தி வந்தாா். சுரேஷுக்கு மனைவி மேனகா, இரு மகள்களும் உள்ளனா். வருமானம் போதுமானதாக இல்லாததால் சுரேஷ் வீடு வீடாகச் சென்று பால் பாக்கெட்டும் போட்டு வந்தாா்.

இதனிடையே, தனது இரு மகள்களின் படிப்புக்காக அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலரிடம் சுரேஷ் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தாா். ஆனால், அந்தக் கடனை சுரேஷால் திருப்பித் செலுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்தவா்கள், சுரேஷிடம் பணத்தைக் கேட்டு தொல்லை கொடுத்தனா்.

இதனால், மன உளைச்சலுக்குள்ளான சுரேஷ், திங்கள்கிழமை அதிகாலை பால் பாக்கெட் போடுவதற்காக தனது கடைக்குச் சென்றவா், அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com