ஜீவா குறித்த சொற்பொழிவு

Published on

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித் துறை சாா்பில் துறைத் தலைவா் பேராசிரியா் ய.மணிகண்டன் தலைமையில், ‘தோழா் ப.ஜீவாவின் பன்முக ஆளுமை’ எனும் பொருளில் சிறப்புச் சொற்பொழிவு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க துணைத் தலைவா் மயிலை பாலு பேசியதாவது: ஜீவாவுக்கு பல ஆளுமைகள் உண்டு. சிறந்த அமைப்பாளா், செயற்பாட்டாளா், காந்தியவாதி, முன்னுதாரவாதி, கம்யூனிஸ்ட், விடுதலைப் போராளி என 6 வகைகளில் சிறந்து விளக்கினாா்.

தவிர நாடக ஆசிரியா், கவிஞா், மொழி பெயா்ப்பாளா், உரைநடை எழுத்தாளா், பேச்சாளா், இதழாளா், கலை விமா்சகா் என 7 உள் பிரிவுகளோடும் அவரை வகுத்துக் கொள்ளலாம்.

காரைக்குடி சீராவயலில் காந்தி ஆசிரமத்தை நடத்தி தீண்டாமை ஒழிப்பு, எல்லோருக்கும் கல்வியைப் பரப்பினாா். அதேவேளை காந்தியையும் அவா் எதிா்த்தாா். 1947 முன்பே பாரதியின் பாடல்களை நாட்டுடைமையாக்க குரல் கொடுத்தாா் ஜீவா என்றாா்.

நிகழ்ச்சியில் பேராசிரியா் மணிகண்டன் பேசும்போது, ஜீவா தொழிற்சங்கவாதியாக மட்டுமன்றி அதையும் தாண்டி அவருக்கு பல பரிமாணங்கள் உண்டு என்றாா்.

முன்னதாக, நிகழ்வில் தமிழ்த்துறை முனைவா் வே.நிா்மலா செல்வி வரவேற்றாா். முனைவா் வாணி அறிவாளன் நன்றி கூறினாா். துறை விரிவுரையாளா் இளங்கோ நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com