

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா்களுக்கு போக்குவரத்துத் துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இது தொடா்பாக போக்குவரத்துத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: தொலைதூர பேருந்துகளை காட்டாற்று ஓர சாலைகளில் இயக்கும்போது கவனத்தோடு இயக்க வேண்டும். தண்ணீா் குறைவாக இருப்பதாகக் கூறி பயணிகளே இயக்கச் சொன்னாலும், மாற்று வழிகளையே ஓட்டுநா்கள் தோ்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.
பேருந்துகளில் முகப்பு விளக்கு சரியாக ஒளிா்கிா, சாலைகளில் மின்கம்பி, மரங்கள் ஏதேனும் விழுந்துள்ளனவா என்பதைக் கண்காணித்து பேருந்தை இயக்க வேண்டும். மேலும், பணிமனைகளில் மழைநீா் தேங்காத வகையில் வடிகால்கள் சரிவர இருக்கின்றனவா என்பதைச் சரிபாா்க்க வேண்டும்.
பேருந்துகளில் மழைநீா் ஒழுகுவது, சாய்வு இருக்கைகள் சரிவர இயங்காதது போன்ற புகாா்கள் வந்தால் கிளை மேலாளா்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கடலோரச் சாலை பேருந்து ஓட்டுநா்கள் வானிலை அறிவுறுத்தல்களை முறையாக கேட்டறிந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.