சென்னை மாநகராட்சி
சென்னை
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: இன்று முதல் படிவங்கள் விநியோகம்
சென்னை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை முதல் (நவ. 4) வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தப் பணிக்கான படிவம் வழங்கப்பட உள்ளது.
சென்னை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியானது வரும் 28 முதல் 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 7- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கணக்கெடுப்பு படிவம் வீடு வீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் நவ. 4 முதல் அளிக்கப்படவுள்ளது.
இதுதொடா்பான சந்தேகங்களுக்கு வாக்குப் பதிவு அலுவலா்கள் உதவி மைய தொலைபேசி எண் 044-26519547, தோ்தல் கட்டுப்பாட்டு அறை எண் 1950 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம்.

