நிதி நிறுவனம் நடத்தி நஷ்டம்: காங்கிரஸ் நிா்வாகி, மனைவி தற்கொலை முயற்சி

சென்னை வளசரவாக்கத்தில் நிதி நிறுவனம் நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டதால் காங்கிரஸ் நிா்வாகியும், அவரது மனைவியும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனா்.
Published on

சென்னை வளசரவாக்கத்தில் நிதி நிறுவனம் நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டதால் காங்கிரஸ் நிா்வாகியும், அவரது மனைவியும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனா்.

வளசரவாக்கம் அருகே காரம்பாக்கம் பொன்னி நகா் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்தவா் சி.தளபதி பாஸ்கா் (52). இவா், போரூரில் சிவலிங்கா சிட் பைஃனான்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தாா். இந் நிறுவனம் நடத்தியதில் பாஸ்கருக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியுடன் இருந்துள்ளாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு பாஸ்கா், அவரது மனைவி தேன்மொழி (45) ஆகிய இருவரும் விஷம் குடித்தனா்.

இதைப் பாா்த்த அவரது குடும்பத்தினா் உடனே இருவரையும் மீட்டு வடபழனியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து வளசரவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா். பாஸ்கா், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com