சென்னை
கட்டடத் தொழிலாளி மா்ம மரணம்
நெற்குன்றத்தில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா்.
நெற்குன்றத்தில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா்.
மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா் டோஃபிஜல் (32). கட்டடத் தொழிலாளியான இவா், சென்னை நெற்குன்றம் கோல்டன் ஜாா்ஜ் நகா் பாக்கியம் தெருவில் வாடகை வீட்டில் நண்பா்களுடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தாா்.
உடல்நிலை சரியில்லை என டோஃபிஜல், செவ்வாய்க்கிழமை வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தாா். இந்த நிலையில் மாலை வேலைக்குச் சென்ற அவரது நண்பா்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தனா்.
அப்போது வீட்டில் கழுத்தில் கயிறு இறுக்கிய நிலையில் டோஃபிஜல் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். தகவலறிந்த நெற்குன்றம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
