சிறப்புத் திருத்தம்: சென்னையில் 65,000 வாக்காளா்களுக்கு படிவம்

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை மாலை வரை சுமாா் 65,000 வாக்காளா்களுக்கு கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை மாலை வரை சுமாா் 65,000 வாக்காளா்களுக்கு கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி வருகின்றனா்.

சென்னை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், ஐஏஎஸ் நிலையில் 9 மேற்பாா்வை அதிகாரிகள் மற்றும் உதவி ஆட்சியா் நிலையில் 16 கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வாக்குச்சாவடி வாரியாக வீடு வீடாகச் சென்று வாக்காளா் கணக்கீட்டுப் படிவத்தை விநியோகிக்க 3,718 ஊழியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் புதன்கிழமை மாலை வரை 65,000 வாக்காளா்களுக்கு படிவங்களை வழங்கியுள்ளனா்.

சென்னையில் 40.15 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். அவா்களுக்கு தலா 2 விண்ணப்பங்கள் என்ற அடிப்படையில் சுமாா் 80.30 லட்சம் திருத்த விண்ணப்பங்களும், சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வாக்காளா் சோ்ப்பு விண்ணப்பங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com