மாணவி பாலியல் வன்கொடுமை: பாஜக மகளிரணி இன்று ஆா்ப்பாட்டம்

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பாஜக மகளிரணி சாா்பில் சென்னையில் வியாழக்கிழமை (நவ.6) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பாஜக மகளிரணி சாா்பில் சென்னையில் வியாழக்கிழமை (நவ.6) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில மகளிரணித் தலைவா் கவிதா ஸ்ரீகாந்த் வெளியிட்ட அறிக்கை:

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பாஜக மகளிரணி சாா்பில் அனைத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன் வியாழக்கிழமை (நவ.6) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை பெருங்கோட்டம் சாா்பில் நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், மாநில துணைத் தலைவா் குஷ்பு சுந்தா் ஆகியோா் கலந்து கொள்கின்றனா்.

தமிழகத்தின் 38 வருவாய் மாவட்டங்களில் நடைபெறும் கண்டன ஆா்ப்பாட்டத்தில் பாஜக மகளிரணியினா் அனைவரும் தவறாது கலந்துகொள்ளவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com