சென்னை சௌகார்பேட்டையில் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள 33,000 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சௌகார்பேட்டை சின்ன ஆதியப்பா தெருவில் ஒரு பார்சல் நிறுவனத்தின் கிடங்கில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக யானைக்கவுனி போலீஸாருக்கு புதன்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார், அங்கு சோதனையிட்டபோது, பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 33, 010 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக அங்கிருந்த ஊழியர்கள் ஜார்கண்ட் மாநிலம் கிரிடி பகுதியைச் சேர்ந்த ஜெயந்தர்சிங் (43), சஞ்சய்சிங் (41) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மேலும் அங்கிருந்த ஒரு சரக்கு ஆட்டோவையும் போலீஸார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.