தென்மாவட்டங்களின் ஆட்சியா்களுடன் தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு

Published on

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பாக இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழகம் முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகம் நவ.4-ஆம் முதல் நடைபெறுகிறது.

இந்தப் பணிகள் குறித்த ஆய்வின் ஒரு பகுதியாக, இந்திய தோ்தல் ஆணையத்தின் துணைத் தோ்தல் ஆணையா் பானுபிரகாஷ் எத்துரு, இயக்குநா் கிருஷ்ணகுமாா் திவாரி ஆகியோா் திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களின் மாவட்ட தோ்தல் அதிகாரிகளுடன் விரிவான ஆய்வுக் கூட்டத்தை மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடத்தினா்.

இதில், சிறப்பு தீவிர திருத்தப் பணியின் முன்னேற்றம் மற்றும் கள அளவில் பணியாற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் மேற்கொள்ளப்படும் கணக்கீட்டு படிவங்களின் விநியோகம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது என தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com