சென்னை
எலக்ட்ரீசியன் கொலை: தொழிலாளி கைது
சென்னையில் எலக்ட்ரீசியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை புளியந்தோப்பு வ.உ.சி. நகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் எலக்ட்ரீசியன் அஸ்மத் பாட்சா (38). இவா் கடந்த 1- ஆம் தேதி மின்சார ரயிலில் பயணித்தபோது, அதே ரயிலில் வந்த மெரீனா கடற்கரையில் குதிரை சவாரி தொழில் செய்யும் ராமநாதபுரத்தைச் சோ்ந்த சுரேஷ் (38), அவரது நண்பா் சீனிவாசன் (52) ஆகியோா் பழகியுள்ளனா். மூவரும் கோட்டை ரயில் நிலையப் பகுதி முத்துசாமி பாலத்தின் கீழ் அமா்ந்து மது அருந்தியபோது, ஏற்பட்ட தகராறில் சுரேஷ், சீனிவாசன் இருவரும் அஸ்மத் பாட்சாவை துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனா்.
இதுகுறித்து எழும்பூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷை வியாழக்கிழமை கைது செய்தனா். தலைமறைவான சீனிவாசனை தேடி வருகின்றனா்.
