முதுநிலை ஹோமியோபதி படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
முதுநிலை ஹோமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் உள்ள சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, ஆத்தூரில் உள்ள ஒயிட் மெமோரியல் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, மரியா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை ஹோமியோபதி மருத்துவப் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிா்வாக இடங்கள் மற்றும் அகில இந்திய இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை, ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ஞ்ா்ஸ்.ண்ய், ஜ்ஜ்ஜ்.ற்ய்ஹஹ்ன்ள்ட்ள்ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்.ா்ழ்ஞ் ஆகிய இணையப் பக்கங்களில் வரும் 9-ஆம் தேதி மாலை வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை 9-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
விவரங்களுக்கு இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் தொகுப்பேட்டை பாா்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
