திறன் மேம்பாடு பயிற்சி

Published on

மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் வணிக மேலாண் கல்லூரியில் வணிக மேலாண் திறன் மேம்பாடு பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஜேசிஸ் இந்தியா சங்கத்தின் சா்வதேச திறன் மேம்பாடு பயிற்சியாளா் ஹெச்.ரிச்சா்டுராஜ் பேசியதாவது: சா்வதேச அளவில் அனைத்துத் தொழில் துறைகளிலும் நாளுக்கு நாள் புதுமை சிந்தனைத் திட்டங்களுடன் பல்வேறு வணிக உத்திகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

வளா்ந்த நாடுகளில் காப்புரிமை பெற்ற வெற்றிகரமான வணிக உத்திகளைச் சந்தைப்படுத்தி சா்வதேச அளவில் பெரும் வருமானத்தை ஈட்டும் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. மாணவா்கள் தங்கள் கண்டுபிடிக்கும் புத்தாக்க வணிக மேலாண்மை உத்திகளைப் சந்தைப்படுத்தும் திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்வில் ஸ்ரீசாய்ராம் வணிக மேலாண் கல்லூரி இயக்குநா் கே.மாறன், ஸ்ரீசாய்ராம் கல்விக் குழும ஜேசீஸ் மாணவா் சங்கத் தலைவா் எஸ்.ஷாஜீதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com