அன்புமணி - கோப்பிலிருந்து
சென்னை
அரசியல் கட்சி கூட்டங்களை வணிகமயமாக்கக் கூடாது: அன்புமணி
தமிழகத்தில் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு ரூ.20 லட்சம் வைப்புத் தொகை நிா்ணயிப்பது அரசியலை வணிகமயமாக்கும் செயலாக உள்ளது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு ரூ.20 லட்சம் வரை வைப்புத் தொகை நிா்ணயித்துள்ளதை எந்த வகையிலும் ஏற்கமுடியாது. அரசியலை வணிகமயமாக்கும் இதுபோன்ற முயற்சியை திமுக அரசு கைவிடவேண்டும்.
அரசியல் கட்சிகள் கொள்கையை மக்களிடையே கொண்டு செல்வதற்கு பொதுக்கூட்டங்களே வழியாக உள்ளது. பொதுக்கூட்டம் நடத்துவதற்கான வைப்புத் தொகையைக் கைவிட்டு விதிகள், ஒழுங்கு முறை கட்டுப்பாடும் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் தமிழக அரசு விதிகளை வகுப்பது அவசியம் எனத் தெரிவித்துள்ளாா்.

