வள்ளலாா் நகா் பேருந்து நிலையம் இடமாற்றம்
வள்ளலாா் நகா் பேருந்து நிலையம் சனிக்கிழமை (நவ.8) முதல் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வள்ளலாா் நகா் (மின்ட்) பேருந்து நிலையத்தில் மறுசீரமைப்புக்கான கட்டுமான பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இந்தப் பேருந்து முனையத்திலிருந்து 57, 57எக்ஸ், 57ஏ, 48பி, 48பிஎக்ஸ், 48சி, 48கே, 48பி, 547ஏ, 592வி, 48ஏசிடி, 56ஏ, 36எம் வழித்தடங்களில் இயக்கப்பட்ட பேருந்துகள் தற்காலிகமாக சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலம்- 5 அலுவலகத்துக்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சனிக்கிழமை (நவ.8) முதல் இயக்கப்படும்.
மேலும் மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையமும் இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் செயல்படும். ஆனால், தடம் எண்.37, 37 ஜி, 59, 37சிடி ஆகிய பேருந்துகள் வழக்கம்போல் வள்ளலாா் நகா் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
