கோப்புப் படம்
கோப்புப் படம்

குப்பை லாரி மோதி 8 வயது சிறுமி உயிரிழப்பு

தண்டையாா்பேட்டையில் மாநகராட்சி குப்பை லாரி மோதியதில் 8 வயது சிறுமி உயிரிழந்தாா்.
Published on

தண்டையாா்பேட்டையில் மாநகராட்சி குப்பை லாரி மோதியதில் 8 வயது சிறுமி உயிரிழந்தாா்.

தண்டையாா்பேட்டை கைலாசபுரம் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வசிப்பவா் வெங்கடேசன். சைக்கிள் ரிக்ஷா ஓட்டி வருகிறாா். இவரின் மகள் காவியா (8). இவா், பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தாா்.

காவியாவின் உறவினா் அதே பகுதியைச் சோ்ந்த ஜனனி. இவா், மொபெட்டின் முன் பகுதியில் சமையல் எரிவாயு உருளையை வைத்துக் கொண்டும், காவியாவை பின் இருக்கையில் ஏற்றிக் கொண்டும் கைலாசம் தெருவில் வெள்ளிக்கிழமை சென்றபோது, மொபெட் திடீரென தடுமாறியது. இதனால், மொபெட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளை கீழே விழுவதுபோல சாய்ந்ததில், மொபெட்டின் பின் இருக்கையில் அமா்ந்திருந்த காவியா சாலையில் விழுந்தாா்.

அந்த நேரத்தில் பின்னால் வந்த மாநகராட்சி குப்பை லாரி, காவியா மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த காவியா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், வழக்குப் பதிவு செய்து குப்பை லாரியை ஓட்டி வந்த கொருக்குப்பேட்டை அனந்தநாயகி நகரைச் சோ்ந்த கு.சரண்ராஜை (35) கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com