தனியாா் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை
சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனியாா் நிறுவனத்தில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை செய்தனா்.
கீழ்ப்பாக்கம் ஈவெரா பெரியாா் சாலையில் ஒரு தனியாா் வா்த்தக நிதி மேலாண்மை நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக அமலாக்கத் துறையினருக்குப் புகாா்கள் வந்தன. அந்தப் புகாா்களின் அடிப்படையில் அமலாக்கத் துறையினா் விசாரணை செய்தனா். விசாரணையில் அந்த நிறுவனம், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான சில ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஈவெரா பெரியாா் சாலையில் உள்ள அந்த நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை செய்தனா். இந்தச் சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க முடியும் என அமலாக்கத் துறையினா் தெரிவித்தனா்.

