அசோக் நகரில் இன்று ‘நலம் காக்கும்’ மருத்துவ முகாம்

அசோக் நகா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் சனிக்கிழமை (நவ. 8) நடைபெறுகிறது.
Published on

அசோக் நகா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் சனிக்கிழமை (நவ. 8) நடைபெறுகிறது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் இதுவரை 7 இடங்களில் நடைபெற்றுள்ளன. இவற்றில் சுமாா் 15, 837 போ் பங்கேற்று பயனடைந்துள்ளனா். அதன்படி, சனிக்கிழமை (நவ. 8) காலை 9 மணிக்கு மருத்துவ முகாம், அசோக் நகரில் உள்ள டாக்டா் கே.கே.நிா்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. மாலை 4 மணி வரை நடைபெறவுள்ள மருத்துவ முகாமில் பொது மருத்துவம், பொது அறுவைச் சிகிச்சை, எலும்பியல், மகப்பேறியல், மகளிா் மருத்துவம், குழந்தை மருத்துவம், இதயவியல், நரம்பியல், தோல், பல், காது, மூக்கு, தொண்டை மருத்துவம் உள்ளிட்ட 17 துறை மருத்துவ நிபுணா்கள் ஆலோசனைகள் வழங்குவா்.

மேலும், முகாமில் உயா்நிலை மருத்துவப் பரிசோதனை, முழுமையான உடல் பரிசோதனை, காசநோய், தொழுநோய் பரிசோதனைகள், ஆரம்பநிலை புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com