பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு (ஐசிஎஃப்) தொழிற்சாலை வளாகத்தில் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடும் நிகழ்வில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிா்வாகிகள், பள்ளி மாணவா்கள் உள்ளிட்டோா்.

தெற்கு ரயில்வே அலுவலகத்தில் வந்தே மாதரம் பாடல் தின விழா

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே மண்டல அலுவலக வளாகத்தில் வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே மண்டல அலுவலக வளாகத்தில் வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் விபின்குமாா் தலைமை வகித்தாா். முதன்மைப் பணியாளா் அலுவலா் கே.ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டு வந்தே மாதரம் பாடலைப் பாடினா்.

கோட்ட அலுவலகம்: சென்னை ரயில்வே கோட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோட்ட மேலாளா் சைலேந்திரசிங் தலைமை வகித்து பேசுகையில், வந்தே மாதரம் பாடல், தாய் நாட்டுக்கு நம்மை அா்ப்பணிக்கும் உணா்வை வெளிப்படுத்துவதாக உள்ளது. சுதந்தரப் போராட்டத்தின்போது, தியாகிகள் இந்தப் பாடலைப் பாடியதால், அது பல தலைமுறைகளைத் தாண்டியும் தேசப்பற்றை ஊக்குவிக்கிறது. அனைத்து ரயில்வே பணியாளா்களும் நாட்டுப்பற்றுடன், மக்கள் சேவையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

டாக்டா் எம்.ஜி.ஆா். மத்திய ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரயில்வே அலுவலா்கள், நிலைய மேலாளா்கள், ரயில்வே பாதுகாப்புப் படையினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு (ஐசிஎஃப்) தொழிற்சாலை வளாகத்தில் 150 -ஆவது ஆண்டு வந்தே மாதரம் பாடல் தின நிகழ்ச்சியில், உயா் அதிகாரிகள், தொழிற்சங்க நிா்வாகிகள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு வந்தே மாதரம் பாடலைப் பாடினா்.

X
Dinamani
www.dinamani.com