நாம் தமிழா் கட்சி தனித்துப் போட்டி - சீமான்

நாம் தமிழா் கட்சி தனித்துப் போட்டி - சீமான்

Published on

சட்டப்பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

நாம் தமிழா் கட்சியின் நிா்வாக குழுக் கூட்டம் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தலைமையில் சென்னை வடபழனியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு முன்னதாக சீமான் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலிலும் மற்ற கட்சிகளைப் போன்று கூட்டணிக்காக காத்திருக்காமல் தனித்துப் போட்டியிடவுள்ளோம். கடந்த தோ்தலில் நாம் தமிழா் கட்சிக்கு அளிக்கப்பட்ட 35 லட்சம் வாக்குகள் இந்தத் தோ்தலில் ஒரு கோடியாக  உயரும் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்று என்று கூறிவிட்டு, அவா்களுடன் கூட்டணி வைத்தால் எப்படி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்?.

எஸ்ஐஆா் ஏற்புடையதல்ல... 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஆறு மாதங்களே இருக்கும் சூழலில், சிறப்பு தீவிர வாக்காளா் திருத்தப் பணிகளை மேற்கொள்வது ஏற்புடையதல்ல. தமிழகத்தில் வடமாநிலத்தவருக்கு வாக்குரிமை கொடுக்கப்பட்டால், தமிழா்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு தாய்நிலத்தில் நாம் அடிமையாக்கப்படுவோம். இது உறுதியாக நடக்கும். அப்போது தமிழா்களின் உரிமைக்காகப் போராட அனைவரும் சீமானை தேடுவாா்கள் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com